இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. சமஷ்டி தீர்வு வேண்டும் என வலியுறுத்தி திருகோணமலையில் இன்றைய தினம் (22.08.2026) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்த…

இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

சமஷ்டி தீர்வு வேண்டும் என வலியுறுத்தி திருகோணமலையில் இன்றைய தினம் (22.08.2026) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மேலும், நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முறையின் நான்காவது வருட அணிதிரளல் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீள்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை முன்மொழிந்து இவ்வருடத்துடன் 75 வருடங்கள் ஆகின்றன.வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்

1900களின் ஆரம்ப முதலே சிங்கள பொதுத்த அரசியல் தலைவர்களின் தமிழ் எதிர்ப்பு பரப்புரைகளும் எழுச்சிகளும், தமிழ் அரசியலில், சமூக நலனுக்காக காப்பாற்றும் தனித்துவமான அரசியல் அமைப்பொன்றின் அவசியத்தை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உணர்த்தியது.

1921ம் ஆண்டு வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக சேர்.பொன்.அருணாசலம் தலைமையில் “தமிழர் மகாஜன சபை” உருவாக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின் ஆட்சி பொறுப்பேற்ற சிங்கள தலைமைகள் மேற்கொண்ட திட்டமிட்ட அரசியல் ஓரங்கட்டல்கள், நில அபகரிப்புகள், வடக்கு கிழக்கில் அமைவிடத்தி எமது பெருமளவிலான குடியேற்றங்கள் ஆகியன தமிழ் மக்களின் இறைமையை அபகரித்தன.

இந்த இறைமை மீடலை நிறைவேற்றுவதற்காக அன்றைய தமிழ் தலைமைகள் சமஷ்டிக் கொள்கையை 1951ம் ஆண்டு முன்வைத்தனர்.ஒரு மக்கள் சமூகம் தனது வாழ்விடப் பிரதேசத்தில் தமக்கான அரசியல் வாழ்வை தாமே தீர்மானித்து, தம்மைத் தாமே நிர்வகித்து, கொள்கைமையாகவும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு இறைமை அவசியமாகும்.

ஒன்றாக ஆட்சி முறையில் இறைமை பகிர்ந்துகொள்ளப்படல் நடைபெறவில்லை. அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும். மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப்பெற முடியும்.13வது திருத்தத்தின் மூலம் ஏமாற்றம் 13வது திருத்தச்சட்டம் இத்தகையாதாகும். இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு இறைமை பகிரப்படவில்லை.

அன்று தொட்டு இன்றுவரையிலும் வடக்கு - கிழக்கில் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள் இறைமையைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. காலம் நீடிப்பதால் 13வது திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். ஒரு நாட்டின் இறைமை என்பது அந்த நாட்டு மக்களுக்குள்ள உரிமைகள், மக்கள் தமக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அவர்களைக் கொண்டு தமக்கேற்ற அரசியல் சமூக பொருளாதார கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி… தமக்கான முன்னேற்றத்தை எட்டுவதற்கும்.

சுருங்கக் கூறின் தமது அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமாகும். இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இறைமையை வெறுமனே நிலைத்துடன் குறுக்கிக்கொண்டுள்ளனர். இலங்கையின் நிலைத்தொடர்ச்சியை பாதுகாப்பது தான் நாட்டின் இறைமையை பாதுகாப்பது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

இறைமை என்பது மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தமது நாட்டிலோ மாநிலத்திலோ தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்யவும், தமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும், உரிமைகளை பிரயோகிக்கவும் மக்கள் கொண்டுள்ள அதிகார பலமே இறைமையாகும். மக்களைத் தவிர்த்துவிட்டு நிலத்தை மாத்திரம் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening